மட்டக்களப்பு சின்ன உப்போடை வாவியில் இரு சடலங்கள் மீட்பு!












மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதை இன்று மாலை 4.00 மணியளவில் அவதானித்த பொதுமக்கள், இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தடயவியல் பிரிவு அதிகாரிகளும் நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட (35 வயதுடைய) சுந்தரலிங்கம் சுபேஷ்,(56 வயதுடைய) சொர்ணலிங்கம் சுதாகரன்.  என இரு  ஆண்களின் சடலங்களையும் மீட்டனர்.

 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடலங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் இரு சடலங்களையும் பார்வையிட்டார்.

  பிரேத பரிசோதனைக்காக சடலங்களை மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 
 இவ் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.