
( மின்மினி மின்ஹா)
இலங்கை சாரணர் சங்கத்தின் மூலோபாய திட்டமிடல் தொடர்பான விசேட செயலமர்வு, மீரிகம லீ தசநாயகே சாரணர் பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
இச்செயலமர்வு, பிரதம சாரணர் ஆணையாளர் தலைமையில், சங்கத்தின் தலைமையக ஆணையாளர்கள் அனைவரும் பங்கேற்ற வதிவிட பயிற்சி நெறியாக அமைந்தது.
உலக சாரணர் சங்கத்தின் மூலோபாய திட்டத்திற்கிணங்க, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டங்களை இலங்கையில் செயல்படுத்துவது குறித்து பிரதமர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார விளக்கமளித்தார்.
ஏப்ரல் 30ஆம் திகதி முதல் மே 02ஆம் திகதி வரை நடைபெற்ற இச்செயலமர்வு, உதவி பிரதமர் ஆணையாளர் திரு. சம்பத் காரியவசம் (முகாமைத்துவம் மற்றும் நிதி) அவர்களின் வழிகாட்டுதலிலும், சர்வதேச ஆணையாளர் வைத்தியர் அசங்க ஏரியாவ அவர்களின் நெறிப்படுத்தலிலும் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், தேசிய பயிற்சி ஆணையாளர் திரு. பத்மலால் பெரேரா, திட்டமிடல் பொறுப்பாளர் திரு. கீத் ரமேஷ், நிறைவேற்று செயலாளர் திரு.எம். ஈ . எஸ்.ஜெயசின்ஹ உள்ளிட்ட தலைமையக உதவி மற்றும் மாகாண , ஆணையாளர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.




