மட்டக்களப்பு ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியில் (10.05.2026)மாலை பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
மருதமுனையில் இருந்து கொக்கொட்டிசோலைக்கு வருகை தந்த குறித்தவேன் கொக் கொட்டிச்சோலை பகுதியிலிருந்து திருமண வைபவம் ஒன்றுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு நோக்கி புறப்பட்ட வேன் இவ்வாறு தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
குறித்த வேனில் ஐந்து பயணிகள் பயணித்துள்ளனர்.
(10.05.2026)மாலை ஆரையம்பதி ஒல்லிக்குளம் பகுதியில் வைத்து வாகனத்தில் தீ பரவியுள்ளது.
சற்று நேரத்திலேயே தீ வேன் முழுவதும் பரவி, வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது இதில் எவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படவில்லை என காத்தான்குடி பொலீசார் தெரிவித்தனர்
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேன் தீப்பற்றியதை அவதானித்த பயணிகள் உடனடியாக வாகனத்திலிருந்து வெளியேறியுள்ளனர். மட்டக்களப்பு தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் வேனில் பயணித்த அனைவரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் மட்டக்களப்பு தலைமையக தடயவியல் பொலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சோதனையிட்டனர்
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இயந்திரக் கோளாறு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


.jpeg)







