மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் *மண்முனைப்பற்றுப் பிரதேச கவிதைகளோடு பேசுவோம்* நிகழ்வு .

 

 






 









































































மண்முனைப்பற்று பிரதேச செயலகம்,  பிரதேச கலாசாரப் பேரவை மற்றும் 
பிரதேச கலாசார அதிகார சபை
இணைந்து*மண்முனைப்பற்றுப் பிரதேச கவிதைகளோடு பேசுவோம்* நிகழ்வினை 2026.05.07 ஆம் திகதி பி.ப 3.15 மணிக்கு மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிபிரதேச செயலாளரும் கலாசார பேரவை உபதலைவருமாகிய திரு.கி.இளம்குமுதன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில்
முதன்மை விருந்தினராக திருமதி தட்சணகௌரி தினேஷ்
(பிரதேச செயலாளரும் பிரதேச கலாசார பேரவை, கலாசார அதிகார சபை நிறைவேற்றுத் தலைவரும்) அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாக
 கவிஞர் திரு. சரவணமுத்து நவநீதன்
 (ஓய்வுநிலை கிழக்கு மாகாண பணபாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்) அவர்களும்,
கவிஞர்  த.கோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்) அவர்களும் கலந்து கொண்டனர். மற்றும் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு வே.தவேந்திரன், மூத்த கவிஞர்களான திருசி.க.பொன்னம்பலம்,   திரு. அழகுதுரை, ஜனாப் AL அப்துல் வதூத், காத்தான்குடி சாந்திமுகைதீன் ஆகியோரும் பிரதேச கலாசார பேரவை நிருவாகிகள், கலாசார அதிகாரசபை நிருவாகிகள், கலைஞர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், கலைமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.
நிகழவில் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி இறைவணக்கம் செய்யப்பட்டது. பின்னர் அமரத்துவம் அடைந்த  பிரதேசத்தின் மூத்த கவிஞர்களுக்கான மலரஞ்சலி  வணக்கம் இடம்பெற்றதுடன் பிரதேச கலைஞர்களின் படைப்புக்களால் வெளிவந்த பத்தகங்களின் கண்காட்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டது. 

 பின் கலாசார உத்தியோகத்தர் வளர்மதி ராஜ் அவர்களால் வரவேற்புரையும் ருத்ரபிரகாஷா மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. 
தோடர்ந்து தலைவரினால் தலைமையுரையும் நிகழ்வுய அறிமுக உரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  தொழில்கள் பற்றிய சிறப்பு கவிதைகள் கலைஞர்களான திரு.கி.ரவீந்திரன், திரு.பு.தியாகதாஸ், திரு த.தங்கயுவன், திரு.கு.மகேசன், திரு.ச.ரகுதாஸ், திரு.கிஸ்கந்தமுதலி,   திரு.ஜீ. எழில்வண்ணன் ஆகியோரால் வாசிக்கப்பட்டது. மற்றும்  மண்முனைப்பற்று பிரதேசத்தின் சில கிராமங்களின், வட்டாரங்களின் கவிதை வளர்ச்சியும் போக்கும் எனும் தலைப்பில்  திரு. சு.ருபேசன் , திரு.த.இன்பராசா, திரு கி. ரவீந்திரன், திரு சௌந்தரராஜன் லெனாட் லொறன்ஸோ, ஜனாப் MR ஜவாத் ஆகிய கலைஞர்களால் ஆய்வுக் கட்டுரைகளும் வாசிக்கப்பட்டது.

மேலும் பிரதேசத்தின் மூத்த கவிஞர்களான திரு.சி.க.பொன்னம்பலம், திரு.ச.அழகுதுரை, ஜனாப் AL அப்துல்வதூத்,  திரு. மூ.அருளம்பலம், திரு. வே.தட்சணாமூர்த்தி ஆகியோருக்கு கலைஞர்  கௌரவம் வழங்கப்பட்டது. பின் சிறப்பு அதிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றது.
இவ்வாறாக "மண்முனைப்பற்று பிரதேச கவிதைகளோடு பேசுவோம்" நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.