ஏர்ன் சிலோன் நிறுவனத்தினால் வாகரை பிரதேசத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி.

 

 








 ஏர்ன் சிலோன் நிறுவனத்தினால்
வாகரை பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கமைவாக வாகரை பிரதேசத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி பனிச்சங்கேணி ஏர்ன் சிலோன் சுற்றுலா விடுதியில்  நடைபெற்றது.

வாகரை சமூர்த்தி அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் தலைமையில் ஏர்ன் சிலோன் நிறுவனத்தினால்  பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்  லண்டனில் வசிக்கும் வைத்தியர் காந்தா நிறஞ்சனின் நிதி உதவியுடன் வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டம் பற்றியும் நேர்மறை பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுகளும் தோல்வி அல்லது கவலைகளில் தன்னை அழிக்கும் சிந்தனைகளை இல்லாமலாக்குவது தொடர்பான  விழிப்புணர்வுகளும் வழங்கப்பபட்டது.

ஏர்ன் சிலோன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.சதீஸ்குமார் மற்றும் வாகரை சமூர்த்தி அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் ஆகியோரால் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டது.