இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick) மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) ஆகியோருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று 04.05.2026 மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இராஜதந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
குறிப்பாக தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு, தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள், தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள், மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் மேய்ச்சல் தரை தொடர்பான இழுபறி நிலை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறைகளின் வீழ்ச்சி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், நீண்டகாலமாக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் அவசியம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் வை.தினேஸ், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் வடகிழக்கு வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
.jpeg)


.jpeg)






