மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் – நவுண்டலியாமாடு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு - மாவடிவேம்பு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின்76 வயதுடைய தந்தையான ஆறுமுகம் என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.





