புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் 54 மாணவர்கள் தமிழ் மொழியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பாடல்களை விளக்கத்தோடு மேடையில் பாடி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 - ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் மேற்கு டிரைட்டன் என்ற ஊரில் கோலாகலமாக நடைபெற்றது. 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். பள்ளியின் ஆலோசகர் தெய்வத்திரு. சிவாபிள்ளை ஐயா அவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் எங்கள் ஆசிரியர்கள் பங்குபெற்றனர். நிகழ்ச்சியில் மாணவர்களின் தமிழ் சார்ந்த கலைநிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு அம்சமாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பாடல்களை 50க்கும் மேற்பட்ட ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மாணவர்கள் விளக்கத்தோடு மேடையில் பாடி சோழன் உலக சாதனை படைத்தனர்.
இந்த புதிய ஆக்கபூர்வமான முயற்சியை அங்கீகரித்து சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர். ஐரோப்பிய நாடுகளில் முதன்முறையாக நடைபெறும் இந்த புதிய முயற்சியை விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்கள்:
* Mr. Danny Beales - Member of Parliament, Uxbridge and South Ruislip
* Mr. Philip Carthorne - Mayor of Hillingdon, London
* திருமதி. வளர்மதி பாரத் - கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், நிர்வாகி, இலண்டன் தமிழ்ச் சங்கம்
* திரு. வேலு சிங்காரா - தலைவர், Indian Business Network (IBN), UK
* திரு. ஜெயபாலன் - இயக்குனர், IC Training Centre, UK
* முனைவர். சங்கர் - தலைவர், இலண்டன் திருவள்ளுவர் இலக்கிய பண்பாட்டுச் சங்கம்
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள்:
* திரு. சங்கரப்பிள்ளை முருகையா - பிரித்தானிய தமிழ்மொழிப் பரீட்சைச் சபை
* திரு. ஜோசப் வில்வராஜ் - பிரித்தானிய தமிழ்மொழிப் பரீட்சைச் சபை
* முனைவர். பொன்னம்மாள் - வணிகக் கல்லூரி இயக்குனர் (ஓய்வு ), இலண்டன்
* திரு. பரம் நந்தா - கவுன்சிலர், North Cheam, Sutton, இலண்டன்
* திரு. நீலமேகம் நிலவன் - நிறுவனர், சோழன் உலக சாதனைப் புத்தகம்
* திரு. அப்பு தாமோதரன் - கவுன்சிலர், Norbury Park, Croydon
இலண்டன்
* திருமதி. தென்றல் - மருத்துவர், தமிழ் ஆர்வலர், இலண்டன்
* திருமதி. கோமதி மார்கபந்து - மருத்துவர், தமிழ் ஆர்வலர், இங்கிலாந்து
* திரு. ஜெயக்குமார் மணி - தமிழ் ஆர்வலர், பறையிசைக் கலைஞர், மான்செஸ்டர்
* திரு. செந்தில்குமார் - தலைவர் - FeBTA UK, ஒருங்கிணைந்த பிரிட்டன் தமிழ்ச் சங்கம், இலண்டன்
பிரித்தானிய தமிழ்மொழிப் பரீட்சசைச் சபையைச் சார்ந்த ,
* திரு. சங்கரப்பிள்ளை முருகையா
* திரு. ஜோசப் வில்வராஜ் ஐயா
நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுகூடிய இந்த சிறப்பான விழாவில் நிகழ்ச்சி நெறியாளுகையை திருமதி. சுகன்யா குணசேகரன் மற்றும் திருமதி. லிண்டா ஜான்சன் ஆகியோர் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர். மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் இதுபோன்ற முழுமையாக தமிழ்சார்ந்த விழாக்களால் மேலும் பல மக்களுக்கு தமிழ்மொழியின் சிறப்பையும் அதன் பெருமையையும் கொண்டுசெல்ல முடியும் என்பதில் ஐயமில்லை.
தமிழால் இணைவோம் ! தரணியில் உயர்வோம் !
.jpeg)


.jpeg)
.jpeg)


.jpeg)


.jpeg)



.jpeg)
.jpeg)
.jpeg)



.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)





