சிராந்தி ராஜபக்க்ஷவின் பெயரில் கொழும்பில் 40 கோடி ரூபா பெறுமதியான வீடு.

 


சிராந்தி ராஜபக்க்ஷ டொரிங்டன் பகுதியில் மேரி லௌட்ஸ் விக்ரமசிங்க என்ற பெயரில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியிருந்ததை ‘லங்காட்ரூத்’ என்ற செய்தி இணையதளம் உறுதி செய்துள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் கூறுகிறது:

”இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக் குழுவானது இந்த வீடு அமைந்துள்ள 260/17 டொரிங்டன் மாவத்த என்ற முகவரியானது, நாமல் ராஜபக்க்ஷவின் சி.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையின் முகவரியாகவும் பயன்படுத்தப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளது.

2002 முதல் 2004 வரை ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில், ரணில் விக்ரமசிங்கவின் தலையீட்டின் பேரில் இந்த வீடு மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியான பிறகு, சம்பந்தப்பட்ட அந்த வீடு, சிராந்தி ராஜபக்க்ஷவின் உண்மையான பெயரான மேரி லௌட்ஸ் விக்ரமசிங்க என்ற பெயரில் முழு உரிமையுடன் வாங்கப்பட்டது.

” இதற்காகச் செலவிடப்பட்ட 40 கோடி ரூபா எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து இலஞ்ச ஆணைக்குழு விசாரித்து வருகிறது,

மேலும் இந்தச் சொத்தை விற்பனை செய்வதோ அல்லது பிறருக்கு மாற்றுவதோ தடை செய்யப்பட்டுள்ளது.