ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று 20 ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கிறார் .
இன்று காலை 9.30 மணிக்கு , 435 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இலங்கையின் 2 வது பெரிய பொது நூலகத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.
பின்னர் பழைய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக் கொண்டு மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ள “ரட்டம எகட்ட” (முழு நாடும் ஒன்றாக) தேசிய வேலைத்திட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.





