புகையிலைப் பயன்பாட்டினால், ஆண்டுதோறும்
22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகுவதாக, புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான
தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
புகையிலை பயன்பாட்டினால், 200 மேற்பட்ட
நோய்கள் ஏற்படுவதாக, துறைசார் அதிகார சபையின் தலைவர், மருத்துவர் ஆனந்த
ரத்நாயக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.





