இலங்கையில் மிக வேகமாக உயர்ந்து வந்த அமெரிக்க டொலரின் மதிப்பு இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது.

 


கடந்த சில தினங்களாக இலங்கையில் மிக வேகமாக உயர்ந்து வந்த அமெரிக்க டொலரின் மதிப்பு இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது. 
நேற்று சந்தையில் 354 ரூபா வரை உச்சம் தொட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை, இன்று 349 ரூபா வரை கணிசமாகக் குறைவடைந்துள்ளது.
இன்றைய தினம் இலங்கை வங்கி (Bank of Ceylon) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 349 ரூபாவாகக் குறிக்கப்ப்பட்டுள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் டொலர் ஒன்றின் மதிப்பு ஒரே நாளில் 5 ரூபாவால் சட்டென வீழ்ச்சியடைந்துள்ளமை சந்தை வட்டாரங்களில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.