நடப்பாண்டில் இதுவரை இரண்டு குழந்தைகள்
உட்பட 12 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகத் தேசிய டெங்கு
கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் பேசிய சமூக மருத்துவர் பிரஷிலா சமரவீர, உயிரிழந்த இரண்டு
குழந்தைகளும் கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்
என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை 25,846 டெங்கு நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
மழை மற்றும் நுளம்புகளின்
இனப்பெருக்கத்திற்குச் சாதகமான சுற்றுச்சூழல் நிலவுவதே இந்த
அதிகரிப்புக்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.





