“Clean Sri Lanka” மற்றும் “Ratama Ekata” தேசிய திட்டங்களின் கீழ்
நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை மையப்படுத்திய விழிப்புணர்வு
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவிற்குள் அமைந்துள்ள மருந்தகங்களை இலக்காகக்கொண்டு இன்று
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், அறிவிப்புப்பதாதைகளும் (Posters) ஒட்டப்பட்டன.
கோறளைப்பற்று
மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அவர்களின் வழிகாட்டல் மற்றும்
மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியின் போது, கோறளைப்பற்று
மேற்கு, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்,
பிரதேச செயல போதைப்பொருள் முற்றடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக
உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை
சிறப்பித்தனர்.
ந குகதர்சன்
.jpeg)

.jpeg)





