பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களினால் மருந்தகங்களுக்கான விழிப்புனர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

 


 




"முழு நாடும் ஒன்றாக"  "ரட்டம எகட்ட "  விஷபோதைப் போதைப்பொருள் தடுப்பு  தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்  மாவட்டத்தில்  சிறந்த மருந்தங்களின் நடைமுறைகள் தொடர்பாக பயிற்சி கருத்தரங்கு முழு நாடும் ஒன்றாக"  "ரட்டம எகட்ட "  மாவட்ட செயலக  போதைப்பொருள் தடுப்பு  உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில்   சுற்றுச் சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. மு. அச்சுதன் அவர்களின் ஒருங்கமைப்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதில் ஒரு அங்கமாக   2026.04.27 திங்கள் கிழமை   மட்டக்களப்பு   நகர்ப்புற  மருந்தகங்களில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களினால்  மருந்தகங்களுக்கான விழிப்புனர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது
இதில்  சுற்றுச் சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. மு. அச்சுதன் , மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி Dr. உதயகுமார்,  மாவட்ட செயலக  போதைப்பொருள் தடுப்பு  உத்தியோகத்தர் தினேஸ், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.