மட்டக்களப்பு திரு திருமதி திருமாறன் தனுஜா தம்பதிகளின் புதல்வியும், கலாநிதி: மலர்விழி சிவஞான சோதி குரு அவர்களின் மாணவியுமான செல்வி திருமாறன் சயந்தவியின் பரத நாட்டிய அரங்கேற்றம் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை CROFT மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது .
நாட்டிய வித்தியா நாட்டியபள்ளியின் ஒழுங்கு படுத்துதலில் இடம் பெற்ற அரங்கேற்ற நிகழ்வில்
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் போராசிரியர் பாரதி கெனடி புளோரன்ஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .
ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் கலந்து சிறப்பித்தார் .
கௌரவ
அதிதியாக மட்/வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை அதிபர் திருமதி
தவத்திருமகள் உதயகுமார் அவர்களும் , விசேட அதிதியாக பரத சூடாமணி ஸ்ரீமதி
சுபத்ரா கிருபாகரன் , சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக
இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரிய தர்ஷினி ஜெகதீஸ்வரன்
அவர்களும் கலந்து கொண்டார்கள் .
அழைப்பு அதிதியாக S.சதீஸ் வொஸ்கோ பங்கேற்றிருந்தார்.
ஆன்மீகத் தொடக்கத்துடன், குருவின் ஆசியுடன் அரங்கேற்றம் ஆரம்பமானது
செல்வி சயந்தவி அவர்கள் சிறு வயதிலேயே நடன அடவுகள், ஜதிகள் மற்றும்
பாவங்களை (முகபாவங்கள்) பல வருடங்கள் கற்றுத் தேர்ந்து இந்த நிலையை
அடைந்துள்ளார்.
நடனக் கோர்வைகள்: அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம்,
வர்ணம், பதம் மற்றும் தில்லானா ஆகிய வரிசையில் ஒரு முழுமையான மார்க்கம்
இங்கு நிகழ்த்தி இருந்தார் .
இசைக் கலைஞர்கள் (பாட்டு, மிருதங்கம், வயலின், புல்லாங்குழல்) மற்றும் குருவின் நட்டுவாங்கம் ஆகியவை நடனத்திற்கு உயிர் கொடுத்தன
குடும்பத்தினர்,
நண்பர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் , நடன இசை பேராசிரியர்கள் முன்னிலையில்
செல்வி சயந்தவி ஒரு முழுமையான நடன கலைஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் .
அரங்கேற்ற நிறைவுற்ற வேளையில் அதிதிகள் சயந்தவியின் குரு மற்றும்
பக்கவாத்திய கலைஞர்கள் , ஒப்பனைக்கலைஞர் , ஆடை வடிவமைப்புக்கலைஞர் , நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள்.
அரங்கேற்ற
நிகழ்வில் கலை ஆர்வலர்கள் , நடன ஆசிரியர்கள் , பேராசிரியர்கள் , பொது
மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சயந்தவிக்கு வாழ்த்து கூறினார்கள் .




























































