அம்பாந்தோட்டை, தங்கல்ல - மெதல்ல கடற்கரைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) மாலை நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.காணாமல் போனவர் நாகுலுகமுவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தனது நண்பருடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன இளைஞனைத் தேடும் பணிகளில் தங்கல்ல பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.





