ஈட்டி எறிதலில் உலக சாதனையாளர்களை வீழ்த்தி இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடம்

 


 

கென்யாவில் நடைபெற்ற ‘கிப் கெய்னோ கிளாசிக்’ மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க போட்டிச் சாதனையுடன் வெற்றியீட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (24) நடந்த இந்தப் போட்டியில் அவர் 89.28 மீற்றர் தூரம் எறிந்து முதல் இடத்தை வென்றார். இதன்மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு பெல்ஜியம் வீரர் திமோதி ஹெர்மன் (87.35 மீ) நிலைநாட்டியிருந்த போட்டிச் சாதனையை முறியடித்தார். அதேபோன்று, ஈட்டி எறிதல் ஒலிம்பிக் சம்பியன்களான தோமஸ் ரோலர் (ஜேர்மனி) மற்றும் முன்னாள் உலக சம்பியன் ஜூலியஸ் யேகோ (கென்யா) போன்ற உலகின் முன்னணி வீரர்களைப் பின்தள்ளி ருமேஷ் முதலிடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.