மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின்
கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும்
வேலைத் திட்டம் இடம்பெற்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு
மாவட்டத்தில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கல்மடு
மற்றும் நாசிவந்தீவு கிராம அதிகாரி பிரிவில் வாழும் வறுமை கோட்டின் கீழ்
வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு
கிராம அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது.
இந்நிலையில் 250
குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்
பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன்
தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த
அறக்கட்டளை மூலம் அமரர் சண்முகசுந்தரம் அவர்களின் 21வது வருட நினைவு
தினத்தையும், அமரர். திருமதி .ஜமுனா சண்முகசுந்தரம் அவர்களின் 18வது வருட
நினைவு தினத்தையும் முன்னிட்டு அமரர் கௌரி சங்கரி தவராசா அவர்களின்
அமரத்துவம் அடைந்த தாய் தந்தை ஆகியோரின் நினைவாக அமரர் கெளரி சங்கரி தவராசா
அவர்களின் கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களினால்
வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் மூலம் 250 குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்
பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வழங்கப்பட்டது.
குறித்த
நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் கிராம அதிகாரி அ.பிரவு, மட்டக்களப்பு
மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரவை உறுப்பினர்களான சா.லோகநாதன்,
எஸ்.கிருபா வ.இனோஐன், இ.சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை
வழங்கி வைத்தனர்.
ந.குகதர்சன்

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)




