மட்டக்களப்பு - கொத்தியாபுலையில் நடைபெற்ற கொலை மற்றும்
கொள்ளைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் இன்று காலை இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு இளைஞர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கவனயீர்ப்பு பேரணியானது காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு நகர் பொலிஸ் சுற்று வட்டம் வரை அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்று மீண்டும் காந்தி பூங்காவை வந்தடைந்தது.
பின்னர் காந்தி பூங்கா முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு, தலையில் கறுப்புப் பட்டியணிந்து தமது எதிர்ப்பினை முன்னெடுத்த இளைஞர்கள் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக் கூடாது, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை
கண்டுபிடித்த கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினருக்கு
நன்றிகள்!, இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழக்கூடாது, ஒருவேளை அவை நிகழ்ந்தால், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனும் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுமார் ஒரு மணி நேரம் கவனயீர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் அங்கிருந்து கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர்
காரியாலயத்திற்கு சென்ற இளைஞர்கள் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்தமையினை பாராட்டி கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் வர்ணஜயசுந்தர அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)





