நிந்தவூர்
ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
கும்பாபிஷேக பெருவிழாவில், “முருக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு சிறப்பாக
இடம்பெற்றது.
ஆலயத்தலைவர்
இராமலிங்கம் ரவீந்திரதேவன் முன்னிலையில், இறுவெட்டு நெறியாளர் வித்தகர்
விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இவ் இறுவெட்டு வெளியீடு
இடம்பெற்றது.
காரைதீவு
தெய்வீக கான சபையின் ஸ்தாபகர் விபுலமணி இ.கோபாலசிங்கம் தயாரித்த 24 முருக
கானங்கள் அடங்கிய இறுவெட்டு ஆலய சந்நிதானத்தில் வெளியீடு செய்யப்பட்டது.
ஆலய கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் ஆசியுரை வழங்கினார்.
இறுவெட்டுகள்
ஆலய மூதாதையரான தம்பியப்பா ,கந்தையா பிள்ளை, இராமலிங்கம் ஆகியோரின்
குடும்ப உறவுகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் இவ் வெளியீடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
( காரையூர் வேதசகா)














