எரிபொருள் தொடர்ச்சியாக கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது பொதுமக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்த முன் வர வேண்டும்- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
வளர்ச்சி அடைந்த நாடுகளே இன்று பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றனர் எரிபொருள் விலை சம்பந்தமாக ஒரு நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது இந்த வரிசைகள் காணப்படுகின்றன இருப்பினும்
எமது நாட்டில் அரசாங்கத்தினால் ஒரு கட்டுப்பாட்டின் கீழ் அவை கொண்டுவரப்பட்டுள்ளது இதேவேளை பொதுமக்கள் தொடர்ச்சியாக மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கு முடிந்த அளவு இரவு வேலைகளிலும் குறைந்த அளவு மின்சாரங்களை பயன்படுத்தி உதவ வேண்டும்
மற்றும் பொது மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஒரு சரியான பாதையில் செல்கின்ற போது எதிர்க்கட்சியினர் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்தை தெரிவித்தார்





