மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் முப்பதாவது ஆண்டு மகிழ்வின் கொண்டாட்டத்தின் மாயச் சித்திரர் கண்காட்சி-

 

 



 வண்ணத்துப்பூச்சி சமாதான பூங்காவின் முப்பதாவது ஆண்டு  மகிழ்வின் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வான மாயச் சித்திரர் கண்காட்சி எதிர்வரும் மூன்றாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை  இலக்கம் 37 பயனியர் வீதி வண்ணத்துப்பூச்சி  சமாதான பூங்கா   அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வின் ஆரம்ப வைப்பவம் எதிர்வரும் மூன்றாம் திகதி காலை 10 மணிக்கு கனேடிய உயர்ஸ்தானிகர்,  அரசாங்க அதிபர்,  மாநகர முதல்வர்,  மட்டக்களப்பு கல்வி வலய  பனிப்பாளர்,  மாநகர ஆணையாளர் மற்றும்    சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஆகியோரின் முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

இந்தக் கண்காட்சியை பார்வையிட வருமாறு   மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர் .