மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவி வரும் குருதித் தட்டுப்பாட்டை முன்னிட்டு, பழுகாமத்தில் மாபெரும் இரத்த தான முகாம்










மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவி வரும் குருதித் தட்டுப்பாட்டை முன்னிட்டு, பழுகாமத்தில் மாபெரும் இரத்த தான முகாம் ஒன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படும் குருதித் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்து, அவசர சத்திரசிகிச்சைகள் மற்றும் நோயாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் மனிதாபிமான நோக்கத்துடன் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

‘ஒரு தானம் பல உயிர்கள்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இம்முகாமிற்கு, அபிவிருத்திக்கான பழுகாமம் பழைய மாணவர் சங்கம் (POSAD) முழுமையான அனுசரணையை வழங்கியது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் ஆர்.ரஞ்சிதா தலைமையிலான குழுவினரும், பழுகாமம் பிரதேச வைத்தியசாலை பணியாளர்களும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.

இந்நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

 

ந குகதர்சன்