மட்/கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையும் அன்புநெறிக்கலை மன்றமும் இணைந்து நடாத்திய “ஆளுமையான ஔவையாள்” வடமோடி கூத்தின் சதங்கையணி விழா .

 

 
































































வடமோடி நாட்டுக்கூத்து தமிழர் மரபுரிமைக் கலைகள் இப்போதைய நவீன காலத்தில் அழிந்து வரும் நிலையில் அழியாவண்ணம் மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த   ஓய்வு நிலை  அதிபர்  திருமதி.தே.அருட்ஜோதி அவர்களால் கலை அம்சங்களை பேணிப் பாதுகாத்துக் கொண்டு  தமிழ் கலைகளுக்கு  மரியாதை செலுத்தி வடமோடி நாட்டுக்கூத்து நிகழ்வில் சலங்கை அணிவிக்கும் நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்கு படுத்தி இருந்தார் .

மட்/கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையும்
அன்புநெறிக்கலை மன்றமும் இணைந்து நடாத்திய 
“ஆளுமையான ஔவையாள்” என்னும் தொனிப்பொருளில் இடம் பெற்ற * சதங்கையணி விழா பிரதேச வாழ் பொது மக்களால் பாராட்டப்பட்டது .
அண்ணாவியார்: திரு சி. ஞானசேகரம்.
தாளம், பிற்பாடல் மற்றும் உதவிப் பயிற்றுனர்: து.கௌரீஸ்வரன்.
விரிவுரையாளர், நுண்கலைத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்.
பொறுப்பாசிரியர்: திருமதி.தே.அருட்ஜோதி
ஓய்வுபெற்ற  அதிபர்.

அரங்கேற்றம் கல்லடி வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் எதிர்வரும் 07.04.2026 தேதி நடைபெற இருக்கின்றன.
அழிந்து வரும் கலை அழியா வண்ணம்  பாதுகாக்க வேண்டியது நமது  ஒவ்வொருவரினதும்  கடமையாகும்.