தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மக்களுடனான அரசியல் கலந்துரையாடல் கிராம மட்டங்கள் தோறும் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் செயலாளருமான க.திலீப்குமார் தலைமையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் நடைபெற்று வருகின்றது.
குறித்த கலந்துரையாடலின் போது நாட்டில் தற்போதைய நிலவரம், அரசாங்கத்தினால் மேற்கொள்ளும் நாடளாவிய வேலைத்திட்டங்கள், கிராமமட்ட அபிவிருத்திகள், உலகளாவிய பொருளாதார மாற்றம், அரசியல் மாற்றங்கள், இலங்கையில் காணப்படும் அரசியல் பிரச்சனைகள், கிராமங்களின் தேவைப்பாடுகள், உடனடி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றிய தெளிவூட்டல் கலந்துரையால் இடம்பெற்றது.
அத்தோடு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும், மேலும் தங்கள் பகுதிகளுக்கு மேற்கொள்ள உள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துiராடப்பட்டது.
கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் பிரஜா சக்தி உறுப்பினர், பொதுமக்கள், கிராமமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ந.குகதர்சன்
.jpeg)
.jpeg)
.jpeg)







