மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரியிலிருந்து 2025ம் ஆண்டு கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் பல்கலை கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 2026.04.02 அன்று கல்லூரி அதிபர் திரு தருமதாஸ் தலைமையில் ஒன்று கூடல் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது .
கல்விப்பொது தராதர உயர்தர பரீட்சையில் கடந்த வருடம் 135 மாணவர்கள் தோற்றி இருந்த நிலையில் 94 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர்.
விஞ்ஞான பிரிவில் 26 மாணவர்களும் , கணித பிரிவில் 07 மாணவர்களும் ,வர்த்தக பிரிவில் 17 மாணவர்களும் ,கலைப்பிரிவில் 40 மாணவர்களும் சித்தி பெற்றிருந்தார்கள் .
70% மாணவர்கள் சித்தி பெற்றிருந்தது விசேட அம்சமாகும்
06 மாணவர்கள் 3A-சித்திகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து தந்தது குறிப்பிடத்தக்கது .




