2025-ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 22-ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 1,198 பரீட்சை நிலையங்களில் தொடங்கவுள்ளன.
இந்த பரீட்சையில் 162,587
விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதாகவும், பரீட்சைகள் மே மாதம் 4-ஆம் திகதி வரை
நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி
அட்டைகள் அந்தந்த அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி
அட்டைகள் அவர்கள் குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன.
அனுமதி அட்டைகளில் ஏதேனும் திருத்தங்கள்
இருப்பின், அவற்றைச் சீர்செய்வதற்காகத் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை
பரீட்வைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளைக்கு அனுப்பி வைக்குமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.





