மட்டக்களப்பு - கரடியனாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் இன்று (11.04.2026 ) கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து பெரிய புல்லுமலை பிரதேசத்தில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போதே, சந்தேக நபர்களிடமிருந்து பூஜை பொருட்கள், புதையல் தோண்டும் உபகரணங்கள் மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.





