கிழக்கு மாகாணத்தின் தனது முதலாவது வியாபார கிளையினை யுனைட்டட்
மோட்டார்ஸ் லங்கா இன்று மாகாணத்தில் உள்ள பொதுமக்கள் வர்த்தகர்கள்
தங்களது சேவைகளை பெற்றுக் கொள்ளும் முகமாக மட்டக்களப்பில் ஆரம்பித்து
வைக்கப்பட்டது
கிளையின் பிரதம நிறைவேற்று அதிகாரி B.SINGHAGE
தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்டத்தின் வர்த்தகர்களினால்
இந்நிறுவனத்தின் சேவை இன்று உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
வாகன
தயாரிப்பில் முன்னோடிகளான ஜப்பான் நாட்டின் உயர்தரத்திலான சகல வாகனங்களும்
இங்கு விற்பனை செய்யப்பட உள்ளதுடன் அவற்றுக்குரிய உதிரி பாகங்கள் மற்றும்
விற்பனைக்கு பிந்திய சேவைகளையும் இங்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள
முடியும்
நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் என பலரும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்
இதுவரை
காலமும் கிழக்கு மாகாண மக்கள் இந்த நிறுவனத்தின் சேவைகளை பெற்றுக்
கொள்வதற்காக பிற மாகாணங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. இருப்பினும்
தற்போது கிழக்கு மாகாண மக்களுக்காக மட்டக்களப்பில் இன்று பிரம்மாண்டமாக
ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வரதன்














