செல்வி வினாயகமூர்த்தி
"பெண்கள் திறமைகளை வெளிக்கொண்டு
வருதல், பெண்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளை எதிர்த்தல்,மற்றும்
பெண்கள் தங்கள் உரிமைகளை அனுபவிக்க வாய்பளித்தல்" எனும் தொனிப்பொருளில்
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பில் (08)
ஞாயிற்றுக்கிழமை சர்வசே மகளீர் தினம் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று
சின்னமுகத்துவாரம் கடற்கரைப்பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில்
ஆலையடிவேம்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட. அலிக்கம்பை, கவடாப்பிட்டி
கண்ணகிகிராமம் 1,2, சின்னப்பனங்காடு,பனங்காடு ,கோளாவில் 1,2,3, நாவற்காடு
ஆலையடிவேம்பு ,அக்கரைப்பற்று,வாச்சிக்குடா, ஆகிய கிராமசேவையாளர் பிரிவில்.
உள்ள குழுக்களின் தலைவி, செயலாளர்கள் பொருலாளர் மற்றும் உறுப்பினர்களையும்
இணைத்து நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
உறுதி மொழி எடுத்தலுடன்
ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் "குடும்ப வன்முறை,அதை தீர்த்துகொள்வதில்
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு அமைப்பின் வகிபாகம், எனும் தலைப்பில்
குழு நாடகம் ஒன்று திருமதி சித்திரவேல் ருபி தலைமையில் இடம்பெற்றிருந்தது.
அத்துடன்
கண்கட்டி யோகட் ஊட்டுதல்,தடி சுற்றுதல்,கயிறு இழுத்தல் போட்டி மற்றும்
கடற்கரையோரத்தை தூய்மைப்படுத்தும் நோக்கில் சிரமதானமொன்றும். இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு அமைப்பின் ஆலையடிவேம்பு கள செயலாளர் சு
நிசாகரி தலைமை தாங்கி சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.














