மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணி்ப்பாளர் பணிமனையில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான (NGO) மீளாய்வு கூட்டம்


























பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி Dr. R. முரளீஸ்வரன் அவர்களின்  தலைமையில், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரிகளான Dr. தனுசியா, Dr. ஸ்ரீவித்தியன் ஆகியோரின் ஒருங்கமைப்புடன்,  சுகாதாரத்  துறையுடன் இணைந்து செயல்படும் அரச சார்பற்ற அமைப்புகள் (NGO) தொடர்பான மீளாய்வு  கூட்டமானது பிராந்திய சுகாதார சேவைகள் பணி்ப்பாளர் பணிமனை ஒன்று கூடல் மண்டபத்தில்  26/3/2026 நடைபெற்றது . இதில்

 சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் தாங்கள் கடந்த காலத்தில் மேற்கொண்டுள்ள பணிகள், தற்போது மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் சுகாதாரத் துறைக்கு வழங்கக்கூடிய ஆதரவுகள் குறித்து விரிவான விளக்கக்காட்சிகளை (Presentations) வழங்கினர்.   இதில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மோகனகுமார், பிராந்தியத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பல பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், தங்களது அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மீளாய்வு  (Review) செய்தனர். குறிப்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன்  ஒருங்கிணைப்பை (Coordination) மேலும் மேம்படுத்துவது சம்மந்தமான  ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன் ,
இந்த மீளாய்வு கூட்டமானது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலமையில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.