)
காரைதீவில்
நேற்று முன்தினம் காரைதீவு விபுலாநந்த மைதானத்தில் இடம்பெற்ற நடைபெற்ற
“KPL premier league Trophy 2026” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்
போட்டியில் விஜயசாந்தன் தலைமையிலான அணி வெற்றிவாகை சூடியது.
வழமை போல் காரைதீவு விளையாட்டு கழகத்தின் நான்கு அணிகள் சிநேகபூர்வமாக பங்கேற்றன.
இந்
நிகழ்வில் பிரதம அதிதியாக அவுஸ்திரேலியாவில் வாழும் காரைதீவு விளையாட்டு
கழகத்தின் முன்னாள் வீரரும், ஒஸ்கார் அமைப்பின் செயலாளருமான
திருச்செல்வம் லாவண்யன் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக கழகப் போசகர்களான
உத்தரவு
பெற்ற நில அளவையாளர் வே . இராஜேந்திரன் , ஓய்வு நிலை உதவிக்
கல்விப்ணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சுற்றுப் போட்டிக்கான அனுசரணையை ஆனந்தகுமாரசுவாமி துஸ்யந்தன் மற்றும் தி.லாவண்யன் ஆகியோர் வழங்கினர்.
இறுதியாக நடைபெற்ற பலரையும் கவர்ந்த கயிறிழுத்தல் போட்டியில் "நல்லமா" அணி வெற்றிவாகை சூடியது.
காரைதீவு விளையாட்டு கழகத்தின் 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா





.jpg)










