இலங்கையில் யானைகள், காட்டுப்பன்றிகள், குரங்குகள் மற்றும் மயில்கள் போன்ற வனவிலங்குகளால் விவசாயப் பயிர்களுக்கும் மனித உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனால் கிராமிய விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கையாள உயர்மட்ட அமைச்சரவைக் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சரின் தலைமையில் அமையவுள்ள இந்தக் குழு, விஞ்ஞானிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் ஆலோசனைகளைப் பெற்று, இப்பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வை வழங்கும் மேலாண்மைத் திட்டத்தை முன்னெடுக்கும்





