உணவக உரிமையாளர்,உணவு கையாளுபவர்களுக்கான உணவு பாதுகாப்பும், சுகாதார நடைமுறை சம்பந்தமான வழிகாட்டல் கருத்தரங்கும்.

 

 


 

 


 































 உணவக உரிமையாளர்,உணவு கையாளுபவர்களுக்கான  உணவு பாதுகாப்பும்,  சுகாதார நடைமுறை சம்மந்தமான  வழிகாட்டல் கருத்தரங்கும். இதில்

  வெல்லாவெளி  களுவாஞ்சிக்குடி பட்டிப்பளை ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய  அதிகாரிக்குட்பட்ட  உணவக உரிமையாளர்,உணவு கையாளுபவர்களுக்கான சுகாதார நடைமுறைசம்மந்தமான  வழிகாட்டல் கருத்தரங்கானது. 20.03.2026 இன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சதுர்முகம் கேட்போர் கூடத்தில் 
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்   வைத்திய கலாநிதி 
Dr.  ஆர். முரளீஸ்வரன் அவர்களின்  தலமையில் இடம்பெற்றது.

இதில் உணவு பாதுகாப்பு வைத்திய அதிகாரி  டாக்டர் . மு.அச்சுதன், சுகாதார வைத்திய அதிகாரிகள்   பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளர்கள், உணவு கையாளுபவர்கள் கலந்து கொண்டிருந்தனர். 
இதன்போது சுகாதார நடைமுறைகள், உணவு சேமிப்பு, சட்டப் பொறுப்புகள் மற்றும் அனுபவங்கள் சார்ந்து  விளக்கமளிக்க பட்டதுடன் , உணவகங்களில்   உணவின் தரம் சம்மந்தமாக மக்கள்  முறைப்பாடளிக்கும்  தொலை பேசி இலக்கம் அடங்கிய sticker  ஒவ்வொரு உணவகங்களிலும்  இருக்க வேண்டும்  என தெளிவுபடுத்தப் பட்டதுடன், 
 உணவை கையாளுதலில் உள்ள நடைமுறை சவால்கள், சுகாதார,   மற்றும் சட்டரீதியான விளக்கங்களுடன்  கலந்துரையாடல் நடைபெற்றது.