மட்டக்களப்பு "ஆணிவேர்" உற்பத்திகள் நிறுவனத்தினரால் மறைந்த கதை மாமணி மாஸ்டர் சிவலிங்கம் ஐயா அவர்களின் 93 வது பிறந்த தினத்தை நினைவு கூறும் முகமாக ஆணிவேர் விற்பனை கூடத்தின் முன்பாக பொது மக்களுக்கு "சிறப்பு கூழ்" வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது .
மாஸ்டர் சிவலிங்கம் ஐயாவின் மகன் வைத்தியர் விவேகானந்தன் தீபமேற்றி கூழ்" வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் .
கவிஞரும் , எழுத்தாளருமான ஆடுகளம் திரைப்பட புகழ் தென்னிந்திய நடிகர் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
சைவ மங்கையர் கழக தலைவரும் , சமூக ஆர்வலருமான திருமதி கலா மகேந்திரராஜா மற்றும்
ஒய்வு பெற்ற வங்கி முகாமையாளர் நடராஜா அருட்சோதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்
பாரம்பரிய மண் குவளையில் வழங்கப்பட்ட கூழை மிக ஆர்வத்துடன் பெற்று அருந்தியதுடன் உற்றார் உறவினர்களுக்கு வழங்குவதற்காகவும் வாங்கியும் சென்றனர்.
கடந்த வாரம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம் பெற்ற அசம்பாவிதம் காரணமாக பொலிஸார் அறிமுகமில்லாதவர்கள் வழங்கும் பானங்களை அருந்த கூடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர் அதன் காரணமாக பொதுமக்கள் இலவச கூழை வாங்கி அருந்துவதற்கு சற்று தயக்கம் காட்டினர்,



.jpeg)
.jpeg)
.jpeg)


























