மத்திய கிழக்கில் போர்ச் சூழல் மிக
உக்கிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் புதிய
ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப்
பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத்
தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானுக்கு இணையாக ஈரான் மீதும் இஸ்ரேல் ஏவுகணைகளை ஏவித் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையில் ஹோர்முஸ் நீரிணையில்
கண்ணிவெடிகளை வைக்க வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
விடுத்த எச்சரிக்கையை மீறியதாக, கூறி ஈரானின் 16 கண்ணிவெடி கப்பல்களை
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தங்கள் நாட்டின் மீது
ஏவப்பட்ட ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு தமது வான் பாதுகாப்பு அமைப்புகள்
பதிலடி கொடுத்து வருவதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.





