காரைதீவு விபுலானந்தா
மத்திய
கல்லூரி வீதியில் உள்ள கரைச்சைப் பால புனரமைப்பு பணிகள்
இழுத்தடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகளையடுத்து ஒருவார
காலத்துள் அப் பாலம் பொதுப் போக்குவரத்திற்காக தற்காலிகமாக
திறக்கப்பட்டுள்ளது.
சுமார்
50 வருட காலம் பழமைவாய்ந்த கரைச்சைப் பாலத்தின் 3 கோடி ரூபாய் செலவிலான
புனரமைப்பு பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வருவது ஏன்? என செய்திகள்
வெளியாகியிருந்தமை தெரிந்ததே.
இது தொடர்பாக கடந்த வாரம் இடம்பெற்ற காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக் கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதனையடுத்து
ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கூட்டம்
முடிவடைந்த கையோடு குறித்த பாலத்தடிக்கு சென்று பார்வையிட்ட தோடு மிகவும்
விரைவாக அதனை பூர்த்தி செய்து மக்கள் பாவனைக்கு திறந்து விடுமாறு
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மிக விரைவாக பணிகள் இடம்பெற்று தற்போது தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி திணைக்களம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்தது.
இதற்கான
பணிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று
கூறப்பட்டிருந்த போதிலும், இன்னும் பூர்த்தி செய்யப்படாமல்
இழுத்தடிக்கப்பட்டு வருவது ஏன்? என பொது மக்கள் கேள்வி எழுப்பியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)


.jpg)








