செங்கலடியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை...







 







"ரட்டம எகட்ட" தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகம் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒன்றிணைந்து ஏறாவூர்பற்று செங்கலடி பகுதியில் விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (04) முன்னெடுக்கப்பட்டது.

​விஷ போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை முற்றாகக் கட்டுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து புனர்வாழ்வு அளித்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இவ் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​​இதன்போது​ போதைப் பொருளின் அபாயம் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

​இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் ஏறாவூர்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

   சுமன்