மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அனைத்து ஆதார மற்றும் பிரதேச வைத்தியசாலைகளின் சுகாதார தகவல் மையம் தொடர்பான ஒன்று கூடல் 17.03.2026 அன்று பிராந்திய சுகாதார ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இத்தகவல் மையமானது வைத்தியசாலையின் பலதரப்பட்ட சேவைகளை மக்களுக்கு அறியத்தரவும், நோயாளர்களின் நோய் நிலைபற்றியும், இறப்பு பிறப்பு வேறு சுகாதாரம் தொடர்பான சான்றிதழ்கள் பெறும் முறைகள் பற்றியும், பிரதேச செயலகங்களுடன் இணைந்த சுகாதார சேவைகள், அரசுசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்த சுகாதார சேவைகள் அவற்றின் சேவைகளை வழங்குகின்ற தொலைபேசி இலக்கங்களை வழங்குதல் போன்ற பல்வேறுபட்ட தகவல்களும் சேவைகளும் இந்நிலையத்தினால் வழங்கப்படுவதுடன் இச்சேவைகளை எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம் என்பது பற்றி பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் R.முரளீஸ்வரன் அவர்களால் கலந்துரையாடப்பட்டது.
பிராந்திய தரம் மற்றும் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி J. சகாய தர்ஷினி அவர்கள் தகவல் மையத்தில் கோவைகள்,சேவை விவரிப்பு அதன் சேவைகளில் எதிர்நோக்கும் சவால்களுக்கான மாற்று வழிகள் பற்றியும் கலந்துரையாடினார்.இந்நிகழ்வானது பிராந்திய சுகாதார பணிமனையின் தரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் ஒருங்கிணைத்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது.














