மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


வரதன்

 கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

 இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக சிறியவர்கள் வயோதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று நண்பகள் வேலை நகரின் முக்கியமான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது

 பொதுமக்கள் இந்த உஷ்ணத்தை எதிர் கொள்ளும் முகமாக இளநீர் சர்பத் தயிர் போன்ற குடி பானங்களை பருகுவதை காணக் கூடியதாக உள்ளது இதன் காரணமாக இவற்றை விற்பனை செய்யும் வியாபார நிலையங்களில் அதிக வருமானம் கிடைக்கின்றது