மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், நடத்தைக் மாற்றம் சார்ந்த மூன்று நாள் பயிற்சி நிகழ்ச்சி மார்ச் 18, 19 மற்றும் 20 ஆகிய தினங்களில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலமயில்
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அனுசரணையுடன்.
சுகாதார மேம்பாட்டு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். மு.அச்சுதன் அவர்களின் ஒருங்கமைப்புடன்.
முதல் கட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களில் இருந்து 30 பேர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிபட்டறை நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை,மற்றும் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
பயிற்சியின் போது, ஆசிரியர்களுக்கு
நடத்தைக் மாற்றம் தொடர்பான அறிவு, மற்றும் திறன்கள் வழங்கப்பட்டன.
அவசரநிலைகளில் செயல்படுவதற்கான வழிமுறைகள் கற்பிக்கப்பட்டன
பயிற்சியைத் தொடர்ந்து செயல்படுத்த உதவும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பயிற்சி நிறைவில், கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் கல்வித் துறையினரான அதிகாரிகள், சமூக வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
இந்த பயிற்சியின் மூலம், முன்பள்ளி மாணவர்களின் சுகாதார பழக்கவழக்கங்களில் நேர் மறையான மாற்றங்களை உருவாக்குவதற்கான அடித்தளம் வலுப்படுத்தப்படும்
.jpeg)







.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)


.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)



.jpeg)


.jpeg)




