மட்டக்களப்பு ​வாகரை காரமுனையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு




 










சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு, வாகரை காரமுனைப் பகுதியில் மகளிர் தின நிகழ்வு 08.03.2026 சிறப்பு வெகு சிறப்பாக நடைபெற்றது.

​சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயப்பிரகாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக மேம்பாடு குறித்த பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன.

​​இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ​வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ​கலாநிதி திருமதி சுஜாராஜினி வரதராஜன், ஓய்வுநிலை ஆசிரியர் மற்றும் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர்
​திருமதி சரஸ்வதி விஜயநாதன், பாடுமீன் சுவஹாஸ் பூ வளர்ப்போர் சங்க ஆலோசகர்
​திருமதி பிரபா செல்வராசா,
கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பெண்களின் சமூகப் பங்களிப்புகள் கௌரவிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

​மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேச பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வும் இதன்போது ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

   ந.குகதர்சன்