"முழு
நாடும் ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்
போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, பாடசாலை மாணவர்களுக்கான
விழிப்புணர்வு வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில்,
அல்-அர்சாத் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று (2) திங்கட்கிழமை
நடைபெற்றது.
சம்மாந்துறை
பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை வடக்கு மற்றும்
கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். ரஸாட் விசேட வளவாளராக கலந்து
கொண்டு உரையாற்றினார்.
இதில்
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார,
சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல்.அப்துல் மஜீட், அல் - அர்சாத் மகா
வித்தியாலய அதிபர் எம். அப்துல் றஹிம், சம்மாந்துறை பிரதேச சபையின்
உள்ளுராட்சி உதவியாளர் திருமதி யூ.எஸ்.எம்.சதாத், நிதி உதவியாளர்
ஐ.கே.சித்தி நஜீமா, பாடசாலையின் பிரதி அதிபர் எம்.சவாஹிர், ஆசிரியர்
மெளலவி ஐ.எல்.அப்துல் மனாப், சம்மாந்துறை பிரதேச செயலக தேசிய அபாயகர
ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை உத்தியோகத்தர் ஏ.ஜே.எம். இக்றாம், மாணவர்கள்,
பெற்றோர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
( வி.ரி.சகாதேவராஜா)









.jpg)




