ஆற்றில் நீராட சென்ற சிறுமியை இழுத்து சென்ற முதலை .

 


அனுராதபுரம் - மரடன்கடவலவில் ஆற்றில் நீராட சென்ற சிறுமி ஒருவரை முதலை இழுத்து சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரடன்கடவலவில் உள்ள ஹினுக்கிரியாவ ஏரியில் நீந்தச் சென்ற சிறுமியை நேற்று பிற்பகல் (19) முதலை ஒன்று கவ்வி இழுத்துச் சென்று கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி என காவல்துறையினர் குறிப்பட்டுள்ளனர்.