சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம அங்குரார்ப்பண வைபவம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் அரசடித்தீவு வடக்கில் இடம்பெற்றது.

 




நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இத்திட்டத்தில் “தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம்” என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசடித்தீவு வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் சி.சுதாகர், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் இ.திரேசகுமாரன், பிரதேச சபை உறுப்பினர் தே.தவேந்திரன், உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், பிரஜா சக்தி குழு தலைவர், மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பல்வேறு திணைக்களங்கள் சார் உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

வைபவ ரீதியாக பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டதுடன், கிளீன் சிறிலங்கா திட்டம் தொடர்பான விழிப்பூட்டலும் இடம்பெற்றதுடன், பொதுமக்களால் சிரமதானப்பணியும் இடம்பெற்றது.