49 வயதுடைய பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை.

 


கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் இரத்தினபுரி - அயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தூல்கல பகுதியில் 

நேற்று வெள்ளிக்கிழமை (13) காலை பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் பெண் ஒருவர் கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்த அயகம பொலிஸார், காயமடைந்த பெண்ணை மீட்டு அயகம வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அயகம - தூல்கல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெண்ணின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.