பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக வறுமையை ஒழிக்கும் பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதற்கு அமைவாக நெல் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதி கூடுதலாக காட்டு யானை தாக்குதலுக்கு பாதிக்க ப்படுவதால் சூரிய சக்தி மூலம் வீதியோட விளக்குகளை ஒளிர செய்வதற்காக5 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மற்றும் இப்பிரதேசத்தில் உள்ள பொது மயானங்கள் மற்றும் பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் தாந்தாமலை பிரதான வீதிக்கு 10 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என
பட்டிப் பளை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் s சுதாகர் தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இப்பகுதி பிரதேச பிரஜா சக்தி உறுப்பினர்களுடனான விசேட அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு
இவ்வாறு கருத்து தெரிவித்தார்
பட்டிப் பளை உதவி பிரதேச செயலாளர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலக ஊழியர்கள் இப்பிரதேச பிரஜா சக்தி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வரதன்












