நாட்டின் சுகாதார சேவையின் மனித வளத்தை மேம்படுத்துதல் மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், 2918 மாணவ தாதியர்களுக்கு நாளை (14) காலை 8.30 மணிக்கு அலரி மாளிகையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கமைவாக, 2025 ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சிக்காக, 2022 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 2918 விண்ணப்பதாரர்களுக்கு இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.