மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி -2026



 






















































மட்டக்களப்பு  இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் K.பகீரதன்   தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் முதன்மை அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரும் கிழ‌க்கு இலங்கையின் முதலாவது சித்த மருத்துவ  விசேட பொது வைத்திய நிபுணருமான Dr. சாரங்கபாணி உதயனன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

 கெளரவ விருந்தினர்களாக 

திரு. கே. கமலமோகனதாசன் உதவி   கல்வி இயக்குநர் (திட்டமிடல்), வலயக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு, 

திரு. என். குகதாசன்
 உதவி  கல்வி பணிப்பாளர், (அபிவிருத்தி)
வலயக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு.
 அவர்களும் 
சிறப்பு விருந்தினர்களாக 

திரு. டி. கோகுலகுமாரன்    பிரதேச    கல்வி பணிப்பாளர் , மண்முனை வடக்கு, மட்டக்களப்பு.

திரு. வி. லவகுமார்
ADE-உடற்கல்வி, மட்டக்களப்பு கல்வி வலயம் ஆகியோர் பங்கேற்றனர் .

 விளையாட்டுப் போட்டியின்    போது   மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி,அணிநடை,ஆசிரியர்களின் துவிச்சக்கரவண்டி அஞ்சல் ஓட்டம் ஆகியன அனைவரையும் கவர்த்தமை குறிப்பிடத் தக்கது.

இவ் விளையாட்டு நிகழ்வில் அயற்பாட சாலை அதிபர்கள்,பாடசாலை ஆசிரியர் கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.